நேபாளத்தில் ஏற்பட்ட ஜென் ஸீ போராட்டத்தில் பலியான இளைஞர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.
நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி ஆட்சி நடந்து வந்த நிலையில் அவரது ஆட்சியில் ஏகப்பட்ட ஊழல்கள் நடப்பதாக ஜென் ஸீ எனப்படும் இளைய தலைமுறையினர் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில் ராணுவம் - போராட்டக்காரர்கள் இடையேயான மோதலில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியானார்கள்.
அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் சர்மா ஒலி பதவி விலகியதுடன் தலைமறைவானார். அதை தொடர்ந்து ஜென் ஸீ போராட்டக்காரர்களால் முன்மொழியப்பட்ட சுசிலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ளார். பதவியேற்றதும் அவர் போராட்டத்தில் பலியான இளைஞர்களை தியாகிகளாக அறிவித்துள்ளார். அவர்களது குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் நேபாள ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையின்போது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
Edit by Prasanth.K