நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரியலூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆளும் கட்சிகளான பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்ற திட்டத்தை விஜய் கடுமையாக கண்டித்தார். இது "ஜனநாயகத்தின் படுகொலை" என்று அவர் சாடினார். இந்த நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்துவதோடு, மாநில அரசுகளை கலைக்கவும் வழிவகுக்கும் என வாதிட்டார். இதன் மூலம் பல தில்லுமுல்லு வேலைகளை செய்ய முடியும் என்று நம்புகிறார்கள் என்று விஜய் கூறினார்.
மேலும், முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை செயல்முறையையும் விஜய் கடுமையாக விமர்சித்தார். இந்த நடவடிக்கை, குறிப்பாக தமிழகம் போன்ற தென்னிந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்கும் நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் தனது அரசியல் பிரவேசம் தனிப்பட்ட ஆதாயத்துக்காக அல்ல என்பதை விஜய் தெளிவுபடுத்தினார். "அரசியல் மூலம் நான் பணம் சம்பாதிக்கத் தேவையில்லை. எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களை சேவிப்பது மட்டுமே எனது ஒரே நோக்கம்," என்று அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
Edited by Siva