தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், அ.தி.மு.க.வை போல தி.மு.க. நாடகம் ஆடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து மேலும் கூறியபோது, "நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதை நாங்கள் மறுக்கவில்லை. இருப்பினும், அதற்கான முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் கைவிடவில்லை.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் விலக்கு சட்டத்தை இயற்றி அனுப்பினோம். ஆனால், அதனை மத்திய பா.ஜ.க. அரசு தடுத்து நிறுத்தியது மக்களுக்கு நன்றாகத் தெரியும். மத்திய அரசின் இந்த செயலை மக்களுக்குத் தெரியாமல் மறைத்து அ.தி.மு.க. நாடகம் ஆடியது போல் நாங்கள் செய்யவில்லை.
மேலும், "இப்போதும் கடுமையாக சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். நிச்சயமாக ஒருநாள் நம் மாநில உரிமைகளை காக்கும் அரசு ஒன்றியத்தில் அமையும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Edited by Siva