இசைஞானி இளையராஜாவை அரசு சார்பில் பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: “இளையராஜா கலைத்தாயின் சொத்து மட்டுமல்ல, நம் அனைவருக்கும் சொந்தமானவர். அதனால் தான் தமிழ்நாடு அரசு அவருக்காக இந்த பாராட்டு விழாவை நடத்துகிறது. இனி ஆண்டுதோறும் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும்.
மேலும், சங்கத்தமிழ் பாடல்களை இசையமைத்து ஒரு சிறப்பு ஆல்பம் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இளையராஜா போன்ற சிறந்த கலைஞருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன்.”
விழாவின் போது, முதல்வர் ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவுக்கு அவரின் சிலையை நினைவுப் பரிசாக வழங்கி கவுரவித்தார்.