தெலுங்கானா மெதக் மாவட்டம் சபாஷ் பள்ளியை சேர்ந்த மமதா, சித்திப்பேட்டை மாவட்டம் ராய்ப்போல் மண்டலத்தைச் சேர்ந்த பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சரண் (3) மற்றும் தனுஸ்ரீ (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில்,சில நாட்களுக்கு முன் மாமியாருடன் ஏற்பட்ட தகராறால் மனம் புண்பட்ட மமதா, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தாய் வீட்டில் தங்கத் தொடங்கினார்.
அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பயாஸ் என்பவருடன் அவளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.அதுமட்டுமின்றி,பல குற்ற வழக்குகளில் சிக்கியிருந்த பயாஸுடன் மமதா, குழந்தைகளுடன் வாழ்ந்தார்.
ஆனால், பின்னர் தனது 2 வயது பெண் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு, கள்ளக்காதலனுடன் வீடு விட்டு தப்பி ஓடினார். மமதாவையும் குழந்தையையும் தேடியும் காணாததால், மமதாவின் தந்தை காவலில் புகாரளித்தார்.அந்த விசாரணையில், மமதா கள்ளக்காதலனுடன் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நர்சாராவ் பேட்டையில் தங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு காவலர்கள் விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர். ஆனால் அதிர்ச்சி என்னவென்றால், குழந்தை காணவில்லை.இதைத் தொடர்ந்து,கடுமையான விசாரணையில், உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்ததால் தாயே தனது குழந்தையை அடித்து கொன்று, சாக்கு மூட்டையில் கட்டி மறைவாக புதைத்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த அருவருப்பான செயலால் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது மமதாவும் பயாஸும் காவலர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.