தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பட்டப்பகலில் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாகயிருக்கும் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹெச்.பி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. 45 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த தனராஜ் என்பவர் ஸ்ரீகாந்த் ரெட்டியிடம் வேலை செய்து வந்திருக்கிறார். அவர் சரியாக செயல்படாததால் ஸ்ரீகாந்த் ரெட்டி தனராஜை வேலையிலிருந்து நீக்கியதாக தெரிகிறது. ஆனால் தனராஜ் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து ஸ்ரீகாந்த் ரெட்டியிடம் தகராறு செய்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று டேனியல் என்பவரை தன்னுடன் அழைத்து வந்த தனராஜ் மது குடிக்க பணம் வேண்டும் என்று ஸ்ரீகாந்த் ரெட்டியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்திடம் பணம் வாங்கிச் சென்று மது அருந்தி வந்த தனராஜ் மற்றும் டேனியல் ஆகியோர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது தன்னை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்படி தனராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை வந்து தன்னை பார்க்குமாறு ஸ்ரீகாந்த் ரெட்டி கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: சேலத்தில் பயங்கரம்... "இரவில் வந்த காதலன்..." சடலமாக மீட்கப்பட்ட திருநங்கை.!!
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த தனராஜ் மற்றும் டேனியல் ஆகியோர் ஸ்ரீகாந்த் ரெட்டியை அவரது அலுவலகத்தில் வைத்து குத்தி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "சரக்கடிக்க காசு குடுயா..." போதையில் எகிறிய மகன்.!! கல்லைப் போட்டு கதையை முடித்த தந்தை.!!