'இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும்': காங்கிரஸ் எம்பி சசி தரூர்..!
Seithipunal Tamil September 15, 2025 01:48 PM

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஸ்கல் இந்தியா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் எம்பி சசி தரூர் கலந்து கொண்டார். அப்போது, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். 

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: நாம் பல விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளன. சுற்றுலா மிகவும் முக்கியமானது என்றும், இது மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது எனவும், இது அரசின் வருவாயை அதிகரிக்கும் என்றும் நமது உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்றது என்ற ஒரு பிம்பம் நம் நாட்டிற்கு உள்ளது. இந்த பிம்பத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலா பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் காவலர் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், நம்மிடம் உயர்தரமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது மிக மோசமான தரம் கொண்ட ஹோட்டல்கள் உள்ளன. ஆனால், நடுத்தர வசதி கொண்ட ஹோட்டல்கள் எதுவும் இல்லை எனவும், நிறைய ஹேட்டல்கள் கட்ட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.