தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு ஆந்திரா மற்றும் அதைஒட்டிய தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, மத்திய விதா்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிக்களுக்கு நகரக்கூடும். மேலும், தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதனையடுத்து தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கட்கிழமை செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செப்டம்பர் 15ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா் மாவட்டங்களிலும், நாளை செப்டம்பர் 16ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் திங்கள்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் இன்று முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை பலத்தகாற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?