கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது,"அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்களின் விருப்ப பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கு ஓடிச் சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் பாதி கூட நம் நிலத்தில் அடியெடுத்து வைக்கவில்லை.ஆனால் இன்று, நமது சாதனைகளை வடமாநில யூடியூப் சேனல்கள் கூட அங்கீகரித்து பேசும் நிலை வந்துள்ளது.
இது தான் திராவிட மாடலின் வெற்றி.தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயமாக முதலிடத்தில் நிறுத்துவேன். அது வெறும் வாக்குறுதி அல்ல, என் உறுதி.நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவேன் என மக்களிடம் சொன்னேன். உண்மையைச் சொல்கிறேன், இதுவரை அந்த தடையை உடைக்க முடியவில்லை.
ஆனால் முயற்சியை ஒருபோதும் கைவிடவில்லை.தமிழ்நாட்டுக்கான நீதி ஒருநாள் கிடைக்கும்; மத்தியிலே தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடும் ஆட்சி அமைய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.அடுத்து வரும் காலமும் நிச்சயமாக நம் திராவிட மாடல் ஆட்சிக்கே சொந்தமானது என முதலமைச்சர் வலியுறுத்தினார்.