திருவண்ணாமலை அருகே மீன்பிடிக்க சென்ற இளைஞரை முதலை கடித்து இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் அணை ஒன்று உள்ளது. அங்கு அப்பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்ற இளைஞர்களும் அவரது நண்பர்களும் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். முனீஸ்வரன் தண்ணீரில் காலை வைத்தப்படி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென முதலை ஒன்று அவரது காலை கவ்வியுள்ளது.
அதிர்ச்சியில் அவர் கத்தவே அவரது நண்பர்கள் உதவ முயன்றுள்ளனர். ஆனால் முதலை முனீஸ்வரன் காலை பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் அவர்கள் கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் அங்கு கூடியுள்ளனர். நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு முனீஸ்வரன் கால்கள் சிதைந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K