தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆர்.சி. சக்தி இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூட்டுப் புழுக்கள். இந்தப் படத்தில் நடிகர் ரகுவரன் (Actor Raghuvaran) நாயகனாக நடிக்க நடிகை அமலா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை மோகினி ரகுவரனின் தங்கையாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு இயக்குநர் கோதண்ட ராமையா இயக்கத்தில் வெளியான ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகி அவதாரம் எடுத்தார் நடிகை மோகினி. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாடோடிப் பாட்டுக்காரன். உனக்காக பிறந்தேன், சின்ன மருமகள், தாய்மொழி, உடன் பிறப்பு, நான் பேச நினைப்பதெல்லாம், கண்மணி, புதிய மன்னர்கள், வனஜா கிரிஜா, பட்டுக்கோட்டை பெரியப்பா, ஜமீன் கோட்டை, தாயகம், சேர சோழ பாண்டியன் என பலப் படங்களில் நடிகை மோகினி நடித்துள்ளார்.
இவர் இறுதியாக தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான குற்றப்பத்திரிகை என்றப் படத்தில் நடித்து இருந்தார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனாலும் நடிகை மோகினி தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை மோகினி பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி குடும்பத்தினர் உடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
நீச்சல் உடை அணிய கட்டாயப்படுத்தப்பட்டேன்:பல ஆண்டுகளாக படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்த நடிகை மோகினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே வைரலானது. அதன்படி கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் கண்மணி. இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மோகினி நாயகியகா நடித்து இருந்தார்.
Also Read… நான் கண்ணால பாத்த அதிசிய மனிதர் இளையராஜா – ரஜினிகாந்த் புகழாரம்
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நடிகை மோகினியை நீச்சல் உடை அணியக்கூறி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். அதனை நடிகை ஏற்க மறுத்ததால் படப்பிடிப்பு அரை நாள் நடைபெறவில்லை. இதன் காரணாமக வேறு வழியின்றி நடிகை மோகினி அந்த உடையை அணிந்து நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் உடல் தழுவ என்ற பாடலுக்காக மீண்டும் கவர்ச்சி உடையை அணியவேண்டும் என அந்தப் படத்தில் கட்டாயப்படுத்தப்பட்டதாக நடிகை மோகினி கூறியது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு – சாண்டி மாஸ்டர்!