2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் பிரச்சாரத்தைத் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருச்சியில் தொடங்கினார்.
”உங்கள் விஜய் நா வரேன்” என்ற தலைப்பில் இந்தச் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. திருச்சி மரக்கடைப் பகுதியில் தனது பரப்புரையைத் தவெக தலைவர் விஜய் தொடங்கினார்.
எல்லோருக்கும் வணக்கம், நான் பேசுறது கேட்குதா என்று தனது பரப்புரையைத் திருச்சியில் தொடங்கினார் விஜய்.
”ஜனநாயகப் போருக்குத் தயாராகும் முன்பு மக்களைப் பார்க்க வந்துள்ளேன். நல்ல காரியத்தைத் திருச்சியில் இருந்து தொடங்குகிறேன்.
திருச்சியில் இருந்து தொடங்கினால் திருப்புமுனையாக அமையும்.
அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும், எம்ஜிஆர் முதல் மாநாட்டைத் திருச்சியில் தான் நடத்தினார்.
தவெக தொண்டர்களைப் பார்க்கும்போது பரவசமாகவும் உணர்ச்சிவசமாகவும் உள்ளது” என்று உணர்ச்சி பொங்கப் பேசியிருக்கிறார்.