'திருச்சியின் வளர்ச்சியை விஜய் பார்க்கவில்லை' அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்
TV9 Tamil News September 14, 2025 07:48 PM

திருச்சி, செப்டம்பர் 14 : திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சியை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Chief Vijay) சரியாக பார்க்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் (Minister Anbil Mahesh) தெரிவித்துள்ளார். இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என பரப்புரையில் தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டி இருந்த நிலையில், அதற்கு தற்போது அன்பில் மகேஷ் பதில் கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். திருச்சியில் 2025 செப்டம்பர் 13ஆம் தேதியான நேற்று தனது பரப்புரையை விஜய் தொடங்கினார். திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் சூழ கரைமடை பகுதிக்கு விஜய் சென்றார். அங்கு உரையாற்றிய அவர், திமுக, பாஜகவை விமர்சித்தார். குறிப்பாக, திருச்சியின் வளர்ச்சி குறித்து திமுகவை விமர்சித்து இருந்தார்.

திருச்சிக்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தவெக தலைவர் வ விஜய் கூ0றினார். இதற்கு தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் கொடுத்துள்ளார். 2025 செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ” தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசும் போது கேட்கல கேட்கல என்று கூறினார்கள்.

Also Read : காலாண்டு தேர்வு… வினாத் தாள் முறையில் பெரிய மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

‘திருச்சி வளர்ச்சியை விஜய் பார்க்கவில்லை’

கேட்கல கேட்கல என சொல்வதை காட்டிலும், விஜய் திருச்சியில் நடந்த வளர்ச்சியை பார்க்கவில்லை.  திருச்சியைச் சேர்ந்தவர்கள் யோசித்து பாருங்கள். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் ரூ.128 கோடி மதிப்பில் அண்ணாவின் பெயரில் 38 ஏக்கரில் வாகன சரக்கு முனையத்தை அமைத்து கொடுத்துள்ளோம்.

ரூ.408 கோடியில் பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ரூ.236 கோடியில் காய்கறி அங்காடி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதே பஞ்சப்பூரில் ரூ.400 கோடி மதிப்பில் டைடல் பார்க்க அமைக்க அடிக்கல் நாட்டப்பட்து. தவெக தலைவருக்கு விஜய்க்கு திட்டமிடல் இல்லை.  பேசும்போதே மைக் ஆஃப் ஆகிவிட்டது. அமைச்சர் கே.என்.நேருவும், நானும் திருச்சி மாவட்ட வளர்ச்சியில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்” என்றார்.

Also Read : குஷியில் தென் மாவட்ட பயணிகள்.. தசரா, தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்.. முழு விவரம் இதோ!

‘விஜய் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்’

தவெக தலைவர் விஜயின் பேச்சு குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்திய பொருளாதார வளர்ச்சியைவிட தமிழகத்தின் வளர்ச்சி 2 மடங்கு அதிகம். விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை விஜய் மறந்துவிடக் கூடாது. அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. நிறைவேற்றவில்லை என்று கூறும் விஜய்க்கு உண்மை தெரியும்” என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.