சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் திருச்சிக்கு வந்தார்.அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அரசியல் வாகனத்தில் புறப்பட்ட விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிராச்சர இடத்தை காந்தி மார்கெட் பகுதியில் நடத்த முடிவு செய்தனர்.10.30 மணிக்கு பிராச்சாரம் தொடங்க இருந்தது.
ஆனால் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ள மரக்கடை பகுதிக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படும் நிலையில் உள்ளது.இதனை தொடர்ந்து தவெக தொண்டர்கள் மத்தியில் விஜயின் பிரச்சார வாகனம் மெதுவாக ஊர்ந்து முன்னேறி வந்தது.மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு காலை 10:30 மணி முதல் 11 மணி வரை விஜய்க்கு பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது .ஆனால், தொண்டர்கள் கூட்டத்தால் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் மரக்கடை பகுதியை தவிக்க தலைவர் விஜய் சென்றடைவாரா என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளது.
தாமதமாக பேசினால் வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர் விஜய் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லையா ? அல்லது காவல்துறை தொண்டர்களை கட்டுப்படுத்த தவறவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.