கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்ட குடிபண்டே பகுதியில், கள்ளக்காதலியை காதலன் அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபாஜான் (40) – திருமணமானவர், மனைவி-பிள்ளைகள் உள்ளனர்.ரமிஜாபி (25) – திருமணமானவர், கணவர்-குழந்தைகள் உள்ளனர்,இவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது,இதுபற்றி இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால், அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்தனர். இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதால், தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு குடிபண்டே டவுனில் ஒன்றாக வசித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி சேர்ந்து குடித்துவந்தனர். நேற்று மாலை வீட்டில் மதுகுடித்தபோது, ரமிஜாபி மேலும் மது கேட்டதாக கூறப்படுகிறது. அதனை பாபாஜான் மறுத்ததால் கடும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாபாஜான், அரிவாளை எடுத்து ரமிஜாபியை சரமாரியாக வெட்டினார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரமிஜாபி துடிதுடித்து உயிரிழந்தார்
அக்கம்பக்கத்தினரின் தகவலின்பேரில் குடிபண்டே போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, பாபாஜானை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.கள்ளக்காதலியை அரிவாளால் காதலன் வெட்டிக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.