ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை சூப்பர் 04 போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியனான ஜப்பான் அணியுடன் மோதியது. இதன் போது 07-வது நிமிஷத்தில் இந்திய வீராங்கனை பியூட்டி டங் டங் கோல் அடித்தார்.
இதையடுத்து 02-ஆம் பாதியில் ஜப்பான் வீராங்கனை 58-வது நிமிஷத்தில் ஷிகோ கோபயக்வா கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதன் மூலம் நடப்பு சாம்பியனான ஜப்பான் அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற விடாமல் இந்திய அணி தடுத்துள்ளது.
தற்போது, இந்திய அணி 04 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் சீனா - தென் கொரியா மோதுகின்றன. அந்த போட்டியில் சீனா டிரா செய்தாலோ அல்லது வெற்றி பெற்றாலோ இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.