இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த மு.வீரபாண்டியன், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 2015-ஆம் ஆண்டு முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2019, 2022 ஆண்டு அவரே மாநில செயலாளராக தொடர்ந்து வந்தார்.
முத்தரசன் 75 வயதை எட்டிவிட்ட காரணத்தினாலும், தொடர்ந்து 03 முறை மாநில செயலாளராக பதவி வகித்த காரணத்தாலும் அவர் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. அதனையடுத்து, அடுத்த மாநில செயலாளரை தேர்வு செய்வதற்கான விவாதம் கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் நடந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் கட்சியின் மாநில குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இ.கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர். இ.கம்யூ புதிய மாநில செயலளாராக தேர்வாகி உள்ள மு.வீரபாண்டியனுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த கட்சிக்கு தமிழக சட்டமன்றத்தில் 02 எம்எல்ஏக்களும், லோக்சபாவில் 02 எம்பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.