Breaking: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு…!!
SeithiSolai Tamil September 14, 2025 12:48 PM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் பதவி வகித்த நிலையில் அவரது பதவி காலம் முடிவடைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பின் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக முத்தரசன் பதவி வகித்தார்.

இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த கூட்டத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.