Parthiban: புதிய பாதை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என அறிமுகமானவர் ஆர்.பார்த்திபன். எதையும் புதிதாகவும் வித்தியாசமாகவும் சொல்லும் இவரது பாணி ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே தொடர்ந்து அவரின் பாணியில் பல படங்களை இயக்கி நடித்தார். ஆனால், அதில் உள்ளே வெளியே போன்ற சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. வித்தியாசமான முயற்சி ,பரிசோதனை முயற்சி என இவர் எடுத்த சுகமான சுமைகள், ஹவுஸ்புல், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு உள்ளிட்ட பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.
இதனால் நஷ்டத்திற்கும் ஆளானார் பார்த்திபன். மற்ற இயக்குனர்களின் படங்களை நடித்து அதன் மூலம் அந்த கடன்களையும் அடைத்தார். தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படங்களின் நடித்தாலும் அவ்வப்போது அவருக்குள் இருக்கும் இயக்குனர் வெளியே வந்து விடுவார். திடீரென வித்தியாசமான முறையில் அறிவிப்பை வெளியிட்டு படத்தை துவங்குவார். அதில் அவருக்கு வெற்றி கிடைப்பதில்லை என்றாலும் தொடர்ந்து அதை செய்து கொண்டே வருகிறார்.
கடந்த பல வருடங்களில் அவர் இயக்கத்தில் அவர் இயக்கி கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என்கிற படம் மட்டுமே ஹிட் அடித்தது. மற்ற படங்கள் வெற்றியைப் பெறவில்லை. இதில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு நான் லீனியர் படமாக வெளிவந்த இரவின் நிழலும் அடக்கம்
குழந்தைகளின் உலகத்தை காட்டுகிறேன் என சொல்லி பார்த்திபன் இயக்கத்தில் போன வருடம் வெளியான Teenz பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. அதன் பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வண்ட பார்த்திபன் இப்போது மீண்டும் தனது அலப்பறையை துவங்கி இருக்கிறார்.
இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இன்று மாலை அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது.. உஷார்’ என பதிவிட்டிருந்தார். அப்போதே பலருக்கும் இவர் ஏதோ ஒரு புதிய படத்தை அறிவிக்கப் போகிறார் என புரிந்து விட்டது.
இந்நிலையில் அவர் இயக்கி நடிக்கப் போகும் நான்தான் CM என்கிற புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிகிறார். அதில் 2026 முதல் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது அதோடு ‘யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கலாம். நானும் நிற்கிறேன் என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் முதல்வராக அமர்ந்த பின் போடப் போகும் முதல் கையெழுத்து எனக்கு பிறகு யாரும் அந்த சீட்டில் அமரக்கூடாது என்பதுதான்.. போடுங்கம்மா ஓட்டு.. Boar சின்னத்தை பார்த்து.. இப்படிக்கு சி.எம் சிங்காரவேலன் எனும் நான்.. சோத்துகட்சி என பதிவிட்டிருக்கிறார். பல வருடங்களுக்குப் பின் அரசியல் தொடர்பான திரைப்படத்தை பார்த்திபன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.