தமிழக அரசு சார்பில் இளையராஜா பெயரில் விருது – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
TV9 Tamil News September 14, 2025 10:48 AM

கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா(Ilaiyaraaja). அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கார்த்தி, பிரபு, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுபரிசு வழங்கி கௌரவித்தார். பின்னர் பேசிய அவர், ராஜா ராஜாதி ராஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீங்கள் ராஜா தான் என பாடலுடன் தொடங்கினார். பின்னர் பேசிய அவர், இளையராஜாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் இசைஞானி பெயரில் விருது வழங்கப்படும் என்றார்.

இதையும் படிக்க : பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகனுடன் மோதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி – ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இளையராஜா நிகழ்ச்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு

இசைஞானி @ilaiyaraaja சார் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடுகிற விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்தோம். அப்போது,Symphony Rehearsal பணிகளுக்காக அங்கு வருகை தந்து இருந்த… pic.twitter.com/flPIaOgSt8

— Udhay (@Udhaystalin)

உதயநிதி ஸ்டாலின் பேச்சு

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, இளையராஜாவுக்கு தானும் ஒரு ரசிகன் என்ற வகையில் கடந்த 1988 ஆம் ஆண்டு இசைஞானி என்ற பட்டத்தை இளையராஜாவுக்கு கலைஞர் கொடுத்தார். நாம் எல்லோரும் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும் நம் எல்லோரையும் தாலாட்டிக்கொண்டிருக்கிற இசை தாய் தான் நம் இளையராஜா. அவர் பாடல் இல்லாமல் எந்த குழந்தைக்கும் தாலாட்டு இல்லை. அவர் பாடல் இல்லாமல் இளமையில் துள்ளல் இல்லை, காதல் இல்லை என்றார்.

இதையும் படிக்க : கூலி படத்தில் நடிச்சது பெரிய மிஸ்டேக்.. ஆமிர்கானின் பேச்சால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வருத்தம்!

பின்னர் பேசிய இளையராஜா, சிம்பொனி செல்வதற்கு முன்பு வீட்டுக்கே வந்து பாராட்டியவர் முதல்வர். எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை. நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டியது என் குழந்தைகளுக்கு தான். குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டிய நேரம் தான் சிம்பொனியாக வந்துள்ளது என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.