மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், கட்டடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும், உயர் நீதிமன்றத்திற்கு விரைந்த போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் வளாகத்தை விட்டு வெளியேற்றினர். இதனையடுத்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படை மற்றும் மேப்ப நாய் படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை நடைபெற்றது.
சமீப காலங்களில் நகரத்தில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளன.எனவே, மக்கள் பீதி அடையத் தேவையில்லை என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னதாக இதேபோன்று இன்று காலை தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?