இது என்னடா மெட்ரோ ரயிலுக்கு வந்த வாழ்வு! பெருகும் ஆதரவால் நிர்வாகம் எடுத்த அதிரடி
Top Tamil News September 14, 2025 06:48 AM

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு வாகனங்கள் இயக்கும் விதமாக, தனியாக துணை நிறுவனம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சென்னையில் தற்போது பச்சை மற்றும் நீலம் என 2 வழித்தடங்களில் 54.1 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரியாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடியும்போது, பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எனவே, பயணிகள் தடையின்றி வந்த செல்ல வசதியாக, இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், கூடுதல் இணைப்பு வாகனத்தை இயக்கும் விதமாக, தனியாக துணை நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மெட்ரோ ரயில் பயணிகளின் வருகை அதிகரிக்க இணைப்பு வாகன வசதி முக்கியமானதாக உள்ளது,மாநகர பேருந்துகள், சிற்றுந்துகள் மட்டுமே போதாது. எனவே, தனியாக புதிய துணை நிறுவனத்தை தொடங்கப்பட உள்ளது.இதற்காக, மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான, ஒப்புதல் கிடைத்தவுடன், கால்டாக்சி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும். அதன்படி, முதல்கட்டமாக 150 இணைப்பு வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் , இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த கட்டத்தில் 500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.