1,148 பேருக்கு வீடு வழங்கிய துணை முதல்வர் உதயநிதி..!
Top Tamil News September 14, 2025 04:48 AM

வியாசர்பாடி, எம்.எஸ். நகரில், 46.72 கோடி ரூபாய் செலவில் 308 நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்; பழைய வியாசர்பாடியில், 34.61 கோடி ரூபாயில் 192 வாரிய குடியிருப்புகள்; வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகரில் 88.62 கோடி ரூபாயில் 642 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.

இதில், வியாசர்பாடி, எம்.எஸ்.நகரில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி, பெண் பயனாளிகளுக்கான வீடு ஒதுக்கீடு ஆணை, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொத்தம் 1,148 பேருக்கு வீட்டு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.