ஃபிளாப் கொடுத்தா இப்டிதான்!.. சிறுத்தை சிவாவை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி!….
CineReporters Tamil September 14, 2025 04:48 AM

Vijay sethupathi: கார்த்தியை வைத்து சிறுத்தை என்கிற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் சிறுத்தை சிவா என இவர் அழைக்கப்பட்டார். அதன்பின் அஜித்தை வைத்து இவர் இயக்கிய வீரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க அஜித்தை வைத்து தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார்.

இதில் விவேகத்தை தவிர மற்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியின் பேட்ட படத்தோடு வெளியான விஸ்வாசம் பேட்டயை விட அதிக வசூலை பெற்றது. ‘அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கு?’ என படத்தை பார்த்த ரஜினி சிவாவை அழைத்து அவரிடம் பேசி அவரின் இயக்கத்தில் அண்ணாத்த என்கிற படத்தில் நடித்தார். ஆனல், அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

#image_title

அதன்பின் சூர்யாவை வைத்து கங்குவா என்கிற படத்தை இயக்கினார் சிவா. இந்த படத்துக்கு பெரிய ஹைப் ஏற்றப்பட்டு பெரிய அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. படம் வெளியான முதல் நாளே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் இப்படமும் தோல்வியடைந்தது.

கங்குவா ரிலீஸாகி பத்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சிறுத்தை சிவாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து இரண்டு தோல்விப்படங்களை கொடுத்து விட்டதால் அவரின் இயக்கத்தில் நடிக்க எந்த நடிகரும் முன் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு கோவிலில் விஜய் சேதுபதியும், சிவாவும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

அப்போது சிவா ஒரு வரியில் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அது விஜய் சேதுபதிக்கு பிடித்திருந்தாலும் பவுண்டட் ஸ்கிரிப்ட்’ என சொல்லப்படும் முழுக்கதையையும் கொடுங்கள்.. படித்துவிட்டு சொல்கிறேன் என சொல்லிவிட்டாராம் விஜய் சேதுபதி. நான் அஜித், ரஜினியை வைத்தே படம் எடுத்தவன்.. என்னிடமே முழு கதை கேட்கிறார் என்கிற அப்செட்டில் இருக்கிறாராம் சிறுத்தை சிவா

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.