சினிமா விருதுகள், அவள் விருதுகள், நம்பிக்கை விருதுகள் என ஆளுமைகளை வருடந்தோறும் விருது வழங்கி கௌரவப்படுத்திவரும் விகடன், அடுத்தகட்டமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கௌரவித்து ஊக்கப்படுத்தும் விதமாக முதல் முறையாக, "விகடன் டிஜிட்டல் விருதுகள்" இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
விகடன் டிஜிட்டல் விருது 2025 விழா இன்று பிற்பகல் 4 மணிக்கு (செப்டம்பர் 13-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.
நம் ஃபேவரைட் சோஷியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்த டிஜிட்டல் உலகையும் வகைப்படுத்தி மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த உற்சாக விழாவை வாசகர்களும் கண்டுகளிக்க வாசகர்களுக்கு வாய்ப்பு வழங்கும்பொருட்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாக இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம்.
வெற்றியாளர்களைச் சரியாகக் கணிக்கும் வாசகர்களுக்கு முன்வரிசை முன்னுரிமை வழங்கும் விதமாக அறிவிப்பு வெளியானதிலிருந்து ஏராளமான வாசகர்கள் உற்சாகமாகப் பங்கேற்றுள்ளார்கள். கலைவாணர் அரங்கம் நோக்கி விருது பெற வரும் டிஜிட்டல் நாயகர்களை விகடன் வரவேற்றுக் கவுரவிக்க காத்திருக்கிறது.
விருது பெறுபவர்களின் விவரங்களை அறிய பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்...
https://www.vikatan.com/collection/vikatan-digital-awards-2025-winners-list
Vikatan Digital Awards 2025: `நேஷனல் பெர்மிட் மதராஸி!' - Best Fiction Channel Winner - Madrasi