தமிழ் திரையுலகின் நீளமான கூந்தல் அழகி என்று ரசிகர்களால் போற்றப்படும் திவ்யபாரதி, ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, தனது தனித்துவமான அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.அதன் பிறகு ‘மகாராஜா’, ‘கிங்ஸ்டன்’ போன்ற படங்களில் நடித்தும் கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்களின் இதயங்களை சிதறடித்து வரும் திவ்யபாரதி, அடுத்து எந்த படத்தில் நடிக்கிறார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திவ்யபாரதி தெரிவித்ததாவது," ‘பேச்சுலர்’க்கு பிறகு நடிக்கும் படம் எனது கேரியரில் முக்கியமாக அமைய வேண்டும் என்பதற்காக, கதைகளை கவனமாக தேர்வு செய்கிறேன்.
அதிலும் குறிப்பாக, என் முதல் 10 படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்பது என் விருப்பம். வாய்ப்புகள் நிறைய வந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் சரியானதை தேர்வு செய்வதற்காக தான் சற்று நேரம் எடுத்துக்கொள்கிறேன். எல்லாம் நல்லபடியே அமையும்,” என்று தெரிவித்துள்ளார்.