ஈரோடு மாவட்டத்தில் மனைவியுடன் கள்ளத்தொடர்பிலிருந்த நண்பனை கொலை செய்த பொக்லைன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி(38). இவரது மனைவி சிந்தாமணி. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வரும் நல்லசாமி தனது குடும்பத்தாருடன் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கோட்டைபுதூர் பகுதியில் வசித்து வருகிறார். சந்திரன் என்ற பொக்லைன் ஆபரேட்டரும் நல்லசாமியும் நண்பர்களாக இருந்து வந்தனர். இருவரும் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
நல்லசாமியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வரும் சந்திரன் அடிக்கடி தங்கி சென்றுள்ளார். இதன் காரணமாக நல்லசாமியின் மனைவி சிந்தாமணிக்கும் சந்திரனுக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. நல்லசாமி ஊரில்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த சந்திரன் நல்லசாமியின் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு நல்லசாமியின் வீட்டிற்கு வந்த சந்திரன், சிந்தாமணியுடன் நெருக்கமாக உட்கார்ந்து பேசியிருக்கிறார். இதனை கண்டு ஆத்திரமடைந்த நல்லசாமி தனது நண்பனின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நல்லசாமியின் வீட்டிற்கு சென்று கொலை செய்யப்பட்ட சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை கொலையாளி நல்லசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!