கலவரத்திற்குப் பின் முதன்முறையாக, இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 2023 மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி மற்றும் குக்கி இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. இது கலவரமாக மாறி வெடித்ததில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறையை தொடர்ந்து, 60000 பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று செப்டம்பர் 13ம் தேதி மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கலவரம் நடந்த பூமியை 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13ம் தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போல் தெரிகிறது என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?