சக்திவாய்ந்த இன்ஜினும், மேம்பட்ட அம்சங்களும், ஸ்டைலான வடிவமைப்பும் கொண்ட புதிய TVS Ntorq 150 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.19 லட்சத்தில் தொடங்கி, ரூ.1.29 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய Ntorq 150, ஸ்டைலிஷ் லுக் பெற்றுள்ளதுடன், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட், கூர்மையான டெயில் லைட் மற்றும் Quad விளக்குகளுடன் வருகிறது. வெள்ளி, டர்போ நீலம், சிவப்பு, பச்சை என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
149cc ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுடன் வரும் இந்த ஸ்கூட்டர், 13.2 ஹார்ஸ் பவர் பவரையும், 14.2Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இன்டகிரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் (ISG) மூலம் கூடுதல் பூஸ்ட் கிடைக்கிறது. கிக் ஸ்டார்ட் வசதி இல்லாமல், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மட்டும் தரப்பட்டுள்ளது.
அம்சங்களில், ஸ்ட்ரீட் மற்றும் ரேஸ் என இரண்டு ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கண்ட்ரோல், சிங்கிள் சேனல் ABS ஆகியவை உள்ளன. ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு, ப்ளூடூத் கால், மியூசிக் கண்ட்ரோல், க்ராஷ் அலர்ட், அலெக்சா சப்போர்ட் ஆகிய வசதிகளும் கொண்டுள்ளது. கூடுதலாக 22 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், USB சார்ஜிங், பார்கிங் பிரேக் லாக் ஆகியன தரப்பட்டுள்ளன.
உயர்நிலை மாடலில் 5 அங்குல TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளதுடன், அதின் லேஅவுட் Apache RTR 310-ஐ ஒத்திருக்கிறது. அடிப்படை மாடலில் LCD TFT டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
Hero Xoom 160 மற்றும் Yamaha Aerox 155-க்கு போட்டியாக வந்துள்ள புதிய TVS Ntorq 150, இளைஞர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.