பரமக்குடி அருகே நின்ற அரசு நகர பேருந்து மீது, ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை நான்கு வழி சாலையில் பார்த்திபனூரில் இருந்து, பரமக்குடி நோக்கி 27-ஆம் எண் அரசு நகர பேருந்து சென்றபோது, திருவரங்கி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் கிளம்ப தயாராகியுள்ளது.
அப்போது, பின்னால் மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி அரசு பேருந்து வேகமாக வந்துள்ளதோடு, அண்ட் பேருந்தின் ஓட்டுநர் கவனக்குறைவாக நகரப் பேருந்துக்கு பின்னால் மோதி, சென்டர் மீடியனில் நிலை தடுமாறி நின்றுள்ளது.
இதனால் மதுரை, ராமநாதபுரம் பஸ் முன்பகுதியில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதில் இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த 20 பயணிகள் ரத்த காயங்களுடன் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.