நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த இளைஞர்களின் புரட்சியால், அதிபர் மற்றும் பிரதமர் பதவி இழந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற நிலையில், தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பீகார் மாநில துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான சாம்ராட் சௌத்ரி, நேபாளம் இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அங்கு அமைதி நிலவியிருக்கும் என்று தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நேபாளம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால், அங்கே இந்தளவு குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. அங்கு அமைதியும் மகிழ்ச்சியும் மட்டுமே நிலவியிருக்கும்," என்று சாம்ராட் சௌத்ரி கூறியுள்ளார்.
மேலும் நேபாளத்தில் தற்போது நிலவும் குழப்பமான சூழலுக்கு இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சௌத்ரியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran