தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது!
Dinamaalai September 13, 2025 05:48 PM

தூத்துக்குடியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை, அக்குவா அவுட் பேக் அமைப்பு ஆகியன சார்பில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று தொடங்கியது. படகில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல், கைட் சர்ஃபிங், பீச் வாலிபால், மாரத்தான், ஒய்ல்டு வாரியர் போன்ற போட்டிகளும் நடைபெறுகின்றன. 

இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர். தொடக்க விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சீதாராமன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டிகள் நாளை (செப். 14) ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.