2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தவெக தலைவர் விஜய், தனது கட்சிக்கான முதல் பெரிய படியை எடுத்து வைத்துள்ளார். “உங்க விஜய் நா வரேன்” மற்றும் “வரலாறு திரும்புகிறது” என்ற வாசகங்களுடன் கூடிய புதிய லோகோவை வெளியிட்டு, தேர்தல் பரப்புரைக்கான ஆரம்பத்தை அறிவித்துள்ளார்.
“தமிழக வெற்றிக் கழகம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்கிற வாசகத்தோடு, வாகை சூடும் அடையாளத்தை தவெக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
“>
இதனுடன், தேர்தல் பிரச்சாரத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு பஸ்ஸும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பஸ் இன்று சாலை மார்க்கமாக திருச்சிக்கு புறப்பட இருக்கிறது. விஜய் நாளை விமானத்தில் திருச்சிக்கு சென்று, அங்கு தனது தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ளார். புதிய லோகோவும், பிரச்சார பஸ்ஸும் வெளியிடப்பட்டதன் மூலம், தவெக தனது தேர்தல் பயணத்தை உற்சாகமாக தொடங்கியுள்ளது.