நவநிர்மாண் சேனாவின் திரைப்பட பிரிவு தலைவர் அமேயா, நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு நேரடியாக எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,"எங்கள் நகரின் பெயர் மும்பை. ஆனால் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக ‘பாம்பே’ அல்லது ‘பம்பாய்’ என்றே புழக்கத்தில் இருக்கின்றன.
இதை நாங்கள் சாதாரண ஆட்சேபனையாக அல்ல, கோபமாக எடுத்துக்கொள்கிறோம்.பெங்களூரு, சென்னை,கொல்கத்தா போன்ற நகரங்களை வேறு பெயர்களில் அழைக்க முடியுமா? முடியாது. அப்படியிருக்கையில் மும்பையை மட்டும் அவமதிக்க யாருக்கும் உரிமையில்லை. மும்பை மக்கள் உங்களை நேசிக்கிறார்கள், உங்கள் நிகழ்ச்சிகளை ரசிக்கிறார்கள்.
ஆனால் எங்கள் நகரம் எங்கள் இதயம். அதை கௌரவிக்க வேண்டும்.இது தவறுதலாக நடந்திருந்தால் உடனே திருத்திக் கொள்ளுங்கள். உங்கள் மேடைக்கு வருகிற பிரபலங்களிடம் கூட மும்பையை ‘பம்பாய்’ என்று அழைக்கக் கூடாது என சொல்லுங்கள்.
இது தொடர்ந்தால் நவநிர்மாண் சேனா தெருவில் இறங்கி வலுவான போராட்டம் நடத்தும்” என எச்சரித்தார்.இதில் குறிப்பாக, கபில் சர்மா தற்போது ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’வை தொகுத்து வழங்கி வருகிறார்.