இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தடைக் கோரி வழக்கு! - உச்சநீதிமன்ற வைத்த ட்விஸ்ட்!
WEBDUNIA TAMIL September 12, 2025 11:48 PM

ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் சவுதி அரேபியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில் நேற்றைய போட்டியில் சவுதி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. அதை தொடர்ந்து வரும் 14ம் தேதி பாகிஸ்தானோடு மோத உள்ளது இந்திய அணி.

இந்நிலையில் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என அந்த மனுவில் அவர்கள் தெரிவித்ததுடன், இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரியிருந்தனர்.

ஆனால் இதை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்ததுடன், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என்றும் அதை ரத்து செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.