கன்னட நடிகர் அவரது மனைவி போன்களை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மர்மக் கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாட்டில் இணைய வழி மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது .இதற்காக காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த இந்த இணைய வழி மோசடியானது பல்வேறு யுத்திகளை கையாண்டு மோசடிக்காரர்கள் பொது மக்களின் பணத்தை அபகரித்து வருகின்றனர். இருந்த போதும் இந்த இணை வழி மோசடியானது தொடர்ந்து கதையாக உள்ளது பல்வேறு அமைப்புகளும் இந்த இணைய வழி மோசடிக்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கன்னட நடிகர் உபேந்திர ராவ் மற்றும் அவரது மனைவியின் போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சைபர் மோசடியின் முயற்சியாக மர்ப நபர்கள் போனை ஹேக் செய்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உபேந்திர ராவ் கூறுகையில் "காலையில் யாரோ ஓருவர் எனக்கு போன் செய்து, டெலிவரி நபருக்கு அட்ரஸ் கிடைக்கவில்லை. இதனால் தங்களுக்கு வந்த Code-ஐ அனுப்புங்கள், அந்த நபர்உடனடியாக உங்களை அழைப்பார் என பேசினார்.
எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால், அவசரமாக அவ்வாறு செய்தேன். அவர்கள் என்னுடைய போனை ஹேக் செய்தனர். அதன்பின் என்னுடைய வாட்ஸ்அப்வில் உள்ளவர்களக்கு அவசரம் எனக் கூறி பணம் அனுப்புமாறு மெசேஜ் அனுப்பினார்கள். 2 மணி நேரத்தில் திருப்பி அனுப்புவதாக கூறி 55 ஆயிரம் கேட்டு தகவல் அனுப்பினர்.
இது தொடர்பான நாங்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சைபர்கிரைன் துறையின் உயர்அதிகாரியிடம் பேசினோம். அவர்கள் மெசேஜ்-யை ஓபன் செய்ய வேண்டாம். பணம் அனுப்ப வேண்டாம் எனக் கூறினர்" என்றார்.இதையடுத்து கன்னட நடிகர் அவரது மனைவி போன்களை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மர்மக் கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.