வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சி நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.அப்போது அவர் கூறுகையில், இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
இதேபோல ஹைதியில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 40 பேர் பலியானதுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்து சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் உள்நாட்டு மோதலை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.