சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் கட்டுப்பாடு... பொதுத்தேர்வு எழுதுவதில் தகுதி நீக்கம்!
Dinamaalai September 16, 2025 06:48 PM

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில் திடீர் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 75% வருகைப்பதிவு வைத்திருக்காத மாணவர்கள், பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும், மாணவர்களின் வருகைப் பதிவை தீவிரமாக கண்காணித்து வருகை பதிவேட்டை பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மாதாந்திர தேர்வுகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் வருகைப் பதிவு ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்

பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. பொதுத்தேர்வு நிறுத்தி வைக்கப்படும் மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயப் பாடங்களுடன் 2 பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பாடத்தை மட்டும் தேர்வு செய்து படிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.