அ.தி.மு.க.வின் ஆட்சியை பா.ஜ.க.தான் காப்பாற்றியது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். "அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. அல்ல; அ.தி.மு.க.வின் 122 எம்.எல்.ஏக்கள் தான்" என்று தினகரன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதலமைச்சரானார் என்றும், ஆனால் தற்போது அவர் அப்பட்டமாகப் பொய் பேசி வருகிறார் என்றும் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க.வின் ஆட்சி காப்பாற்றப்பட்டதற்கு சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம் என்றும், இதில் பா.ஜ.க.வுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தினகரனின் இந்த பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran