அன்புமணி ராமதாஸை பா.ம.க தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளதாக சிவகாசியில் பா.ம.க பொருளாளர் திலகபாமா தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பொருளாளர் திலகபாமா கூறுகையில், "பா.ம.க தலைவராக ஆகஸ்ட் 2026 ஆம் ஆண்டு வரை அன்புமணி நீடிப்பதாக தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது. இதனால் இதுவரை நீடித்த குழப்பங்களுக்குத் தீர்வாக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது.
மருத்துவர் அன்புமணி ராமதாஸின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. பா.ம.க இனி எந்தப் பக்கம் என்ற குழப்பத்தை விட்டுவிட்டு பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றுதான், அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்தான் என்பதை முன்னெடுத்து பணியாற்ற வேண்டும்.
பா.ம.க ஜனநாயகரீதியில் அன்புமணி தலைமையில் சட்ட ரீதியாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ சரியாகச் செய்து கடந்து வந்து கொண்டிருக்கிறது.
பா.ம.க-வைப் பிளவுபடுத்த வேண்டும், அன்புமணி தலைவராக இருக்கக் கூடாது, பா.ம.க-வை ஒன்றுமில்லாமல் செய்து தி.மு.க-வுடன் இணைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்களிடமிருந்து கட்சியை மீட்கும் நடவடிக்கையாக அன்புமணி ராமதாஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?கட்சியைப் பிளவுபடுத்துபவர்கள் மீது அன்புமணி ராமதாஸ் உரிய நடவடிக்கை எடுப்பார். சட்ட ரீதியாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக அன்புமணி ராமதாஸ் இருக்கிறார். பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளராக அனைவரும் வரும் 2026 ஆகஸ்ட் மாதம் வரை பொறுப்பில் நீடிக்கிறோம்.
தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாசை தலைவராக அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுவது பொய் என கூறும் எம்.எல்.ஏ அருள் பொய் என்றால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும்.
கட்சியின் நிறுவனரை மாற்றவே முடியாது. அவர்தான் கட்சியை உருவாக்கியவர், இனியும் அவர் நிறுவனராக இருந்து எங்களை வழிகாட்ட நாங்கள் தயாராக உள்ளோம். சிலர் பேச்சைக் கேட்டு அவர் நடந்து கொள்வதை ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு மீடியாவை அழைத்து ஒருவரை செயல் தலைவர் என அறிவிக்க முடியாது.
ஒரு மீடியா வழியாக தலைவரை மாற்ற முடியாது. அதற்கான ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால்தான் அனைவரும் கொந்தளித்தோம். நிறுவனரை நீக்குவதற்கான முடிவை எடுக்க மாட்டோம். கட்சியை உருவாக்கி அது இயக்கமாக மாறி மக்கள் கையில் வந்துள்ளார்.
`அன்புமணியால் பாமக அழிகிறது; கட்சியில் இருந்து அன்புமணி நீக்கம்!’ - ராமதாஸின் அதிரடிஅதன் பின் பல பேரின் தியாகம், உழைப்பு, பல பேரின் வழிநடத்தல்கள் எல்லாம் சேர்ந்து இயக்கம் செயல்படுகிறது. ஆகையால் இனி தனி மனிதர் முடிவெடுக்க முடியாது. நான்தான் உருவாக்கினேன் எனச் சொல்ல முடியாது.
சட்டம், தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய முடியும். கூட்டணி கட்சி சார்ந்த கடிதங்களை கட்சி தலைவர்தான் கொடுக்க முடியும். மருத்துவர் ராமதாஸ் கூட்டணி குறித்த கடிதத்தைக் கொடுக்க முடியாது. அவர் நிறுவனர் மட்டும்தான், அவர் தலைவர் அல்ல.
கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் பேச முடியாது. கூட்டணி குறித்து தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் முடிவெடுப்பார். தலைவர் மட்டுமல்ல தலைவர் தலைமையிலான பொதுக்குழுவும் சேர்ந்து கூட்டணி குறித்து முடிவெடுக்கும். நிறுவனர் ராமதாஸை ஒதுக்கவும் இல்லை, விளக்கவுமில்லை.
அவர் மீது மரியாதையும், அவரது உழைப்பின் மீது மிகுந்த மரியாதையுடன் உள்ளோம். நிறுவனர் ராமதாஸ் சொல்வதை பொதுக்குழு ஜனநாயக அடிப்படையில் முடிவெடுக்கும். இதிலும் தனிமனித முடிவுகள் செல்லுபடியாகாது. இனிமேல் அன்புமணி ராமதாசை யாரும் நிக்க முடியாது.
இதுவரை மருத்துவர் ராமதாஸிடம் சேர்ந்தவர்கள் யாரையும் அன்புமணி ராமதாஸ் நீக்கவில்லை கட்சிக்கு விரோதம் இழைத்தவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளார்கள்" என்றார்.
Vikatan Digital Awards 2025 - "பேரன் பேத்திகள்தான் என் உலகம்" - செளமியா அன்புமணி நெகிழ்ச்சி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk