சென்னையில் இன்று (செப்டம்பர் 16) ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.10,280 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) விலை ரூ.82,240 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
இன்று பெரிய அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ. 82,000 தாண்டியுள்ளது. நகை வாங்க விரும்பும் பொதுமக்களில் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் காட்டி வருவது, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று விகித மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.