ஏடிஎம்-ல் பணம் சிக்கிக்கொண்டதா? பாதுகாப்பாக திரும்ப பெறுவது எப்படி?
TV9 Tamil News September 17, 2025 12:48 AM

நம்மில் பலரும் குறைந்தது ஒரு முறையாவது ஏடிஎம்-ல் (ATM) பணம் எடுக்கும்போதும் பணம் சிக்கிக்கொள்ளும் அனுபவத்தை எதிர்கொண்டிருப்போம். சில நேரங்களில் நாம் கோரிய பணத்தை விட குறைவான பணமே நமக்கு கிடைக்கும். சில நேரங்களில் முழுமையான பணமும் சிக்கிக்கொள்ளும். இது பொதுவாக வங்கிகளின் சர்வர் பிரச்னை மற்றும் ஏடிஎம் இயந்திரத்தின் பிரச்னை காரணமாக ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலும் மக்களுக்கு பதட்டம் ஏற்படும். இந்த நிலையில் நம் பணத்தை பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் என்ன செய்ய வேண்டும்?
  • பணம் சிக்கிக்கொண்டால் உடனே பதற்றமடையக் கூடாது. சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரம் சற்று தாமதமாக பணத்தை வெளியேற்றும்.
  • ஒருவேளை உங்கள் பணம் பாதியிலேயே சிக்கிக்கொண்டால் அதனை வலுக்கட்டாயமாக பணத்தை இழுக்க முயற்சிக்க வேண்டாம்.
  • பல சமயங்களில் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் 24 மணி நேரத்துக்குள் தொகை தானாகவே கணக்கில் திரும்ப கிடைக்கும்.

இதையும் படிக்க : இந்த காரணங்களுக்காக லைஃப் இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்! தவிர்ப்பது எப்படி?

பணம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
  • ஏடிஎம் ரசீது இருந்தால் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
  • ரசீது இல்லாவிட்டாலும், எஸ்எம்எஸ் அலர்ட் அல்லது வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட்டை வைத்து புகார் செய்யலாம்.
  • 24 மணி நேரத்திற்குள் பணம் திரும்ப வராவிட்டால், உடனே வங்கியின் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
தேவையான விவரங்கள்
  • ஏடிஎம் லொகேஷன்
  • பரிவர்த்தனை நடந்த தேதி மற்றும் நேரம்
  • ஏடிஎம் ரசீது அல்லது எஸ்எம்எஸ் அலெர்ட் விவரம்
புகார் செய்வது எப்படி?
  • ஏடிஎம்-ல் எரர் மெசேஜ் காண்பித்தால் அதனை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
  • கஸ்டமர் கேர் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால், அருகிலுள்ள வங்கி கிளையில் எழுத்துப்புர்வமாக புகார் அளிக்கலாம்.
  • புகாருக்கான டிராக்கிங் நம்பர் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்
  • வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் புகார் செய்யலாம்.
  • பொதுவாக இத்தகைய பிரச்னைகள் 7 முதல் 10 வேலை நாட்களுக்கு தீர்க்கப்படுகின்றன.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் விதிப்படி வங்கிகள் 45 நாட்களுக்குள் தொகையை திரும்ப அளிக்க வேண்டும்.
  • காலக்கெடு கடந்தும் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால், வாடிக்கையாளருக்கு தொகையை வட்டியுடன் வங்கிகள் அளிக்க வேண்டும்.

இதையும் படிக்க : இஎம்ஐ செலுத்தவில்லையா? உங்கள் போன் லாக் செய்யப்படலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்

ஏடிஎம் பணம் சிக்கியிருந்தால் அல்லது வரவில்லை என்றால் அது பெரிய பிரச்னை இல்லை. நிறைய வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை தான். இதனால் வாடிக்கையாளர்கள் பதட்டப்படாமல் இருப்பது அவசியம். உரிய சான்றுகளுடன் வாடிக்கையாளர் சேவை மையத்திலோ அல்லது நேரடியாக வங்கியிலோ புகார் அளித்தால் உங்கள் பணம் சில நாட்களில் உங்களிடம் வந்து சேரும். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.