Parasakthi: சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பராசக்தி. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். இவர்களுடன் அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பராசக்தி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே பெரும் சர்ச்சை கிளம்பியது. ஏனெனில் தெலுங்கில் பராசக்தி தலைப்பை தனது படத்திற்காக விஜய் ஆண்டனி பதிவு செய்ததாக கூறினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தலைப்பு உரிமை சம்பந்தமாக சர்ச்சை கிளம்பியது.
இது அப்போது சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது .அதன் பிறகு சிவகார்த்திகேயன் தரப்பிற்கும் விஜய் ஆண்டனி தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த தலைப்பு தொடர்பான பிரச்சினையை பற்றி சமீபத்தில் விஜய் ஆண்டனி ஒரு நேர்காணலில் தெளிவாக கூறியிருக்கிறார். தற்போது அவருடைய நடிப்பில் அடுத்து வெளியாக கூடிய திரைப்படம் சக்தி திருமகன். இந்தப் படம் தான் பராசக்தி என்ற தலைப்பில் விஜய் ஆண்டனி ரிலீஸ் செய்ய இருந்தார்.
இதைப் பற்றி அவர் கூறும் பொழுது அந்த சமயத்தில் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்தேன். பராசக்தி என்ற தலைப்பு ஒரு பெரிய லெஜென்டரி நடிகர் நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம். ஏவிஎம் நிறுவனத்திடம் இந்த தலைப்பை பற்றி கேட்பதற்கு முன் நான் கொஞ்சம் யோசித்தேன். ஏனெனில் தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்த எனக்கு எப்படி அந்த தலைப்பை கொடுப்பார்கள் என நினைத்தேன். அதனால் முதலில் படத்தை முடித்துவிட்டு படத்தைப் போட்டு காண்பித்த பிறகு தலைப்பை வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன் என்று விஜய் ஆண்டனி கூறினார்.
அதற்குள் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பராசக்தி என அறிவிப்பு வெளியானது. அந்த படக்குழு அதற்கான உரிமைகள் எல்லாமே சரியாக பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் பெரிய படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திரைப்படம் .அதனால் நான் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. சரி தமிழில் தான் தன்னால் இந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என நினைத்து தெலுங்கு கன்னடம் என மற்ற மொழிகளில் நான் முன்பே அந்த படத்தின் தலைப்பை பதிவு செய்து விட்டேன் .
அதனால் அவர்களால் மற்ற மொழிகளில் அந்தப் படத்தின் தலைப்பை வாங்க முடியவில்லை. அது மட்டுமல்ல அவர்கள் தெலுங்கில் தெரியாமல் டீசரை வெளியிட்டு விட்டார்கள். அதனால் அந்த டீசர் வெளியான பிறகு தான் இது என்னுடைய டைட்டில் என நான் சொன்னேன். இருந்தாலும் அவர்கள் அறிவித்து விட்டார்கள், பெரிய படமாக இருக்கிறது, நமக்குத் தெரிந்த நண்பரும் கூட என நினைத்து அந்த தலைப்பையும் நான் கொடுத்து விட்டேன். இவ்வளவுதான் நடந்தது .இப்போது தமிழில் சக்தி திருமகன் என்ற பெயரிலும் மற்ற மொழிகளில் பத்ரகாளி என்ற பெயரிலும் அந்த படம் வெளியாக இருக்கிறது என விஜய் ஆண்டனி அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.