“சில வேலைகள் பெரியவை, சில வேலைகள் சிறியவை” என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் வேலையின் உயர்வு என்பது அதில் காட்டும் விருப்பம், நேர்மை மற்றும் மீது ஆர்வம் தான் என்பதை தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உணர்த்துகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றார்.
View this post on Instagram
அந்த வீடியோவில் நடத்துனர் பேருந்தில் பின்புற வாயிலில் நின்றிருப்பதை காணலாம். 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தனது விரல்களில் அழகாக வைத்துள்ளார். அவர் வாசலில் நின்றபடி கைநீட்டிய நிலையிலும் அவர் விரலில் இருந்த ரூபாய் நோட்டுகள் விழவே இல்லை. அவர் கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை நினைத்து பதட்டப்படாமல் இயல்பாக தன்னுடைய வேலைகளை செய்யும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் 94 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். பலரும் தங்கள் கமாண்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.