சமையல் சிலிண்டருக்கு 55 % வரியா? - தமிழக அரசு விளக்கம்.!!
Seithipunal Tamil September 17, 2025 04:48 AM

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு 55 % மாநில அரசு வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவல் தவறு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசு 5 சதவீதம் தான் வரி விதிக்கிறது. ஆனால், மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல் என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 'சமையல் கியாஸ் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் வருகிறது. மத்திய, மாநில அரசு சார்பில் தலா 2.5 சதவீத வரி மட்டுமே சமையல் கியாசுக்கு விதிக்கப்படுகிறது. எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.