சென்னை வளசரவாக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த 1 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் ஒன்பதாவது தெரு பகுதியில் ஆனந்தன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இவருடைய மூன்றாவது குழந்தை கடந்த 8 ஆம் தேதி மாலை வீட்டின் முதல் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மாடியிலிருந்து இருந்து தவறி கீழே விழுந்தது 1 வயது உடைய சர்வேஷ்வரன் என்ற அந்த ஆண் குழந்தைக்கு அப்போது தலையில் பலத்த அடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக கே-10 கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.