இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை! காதல் விவகாரம் காரணமா? - மயிலாடுதுறையில் பரபரப்பு!
WEBDUNIA TAMIL September 17, 2025 02:48 AM

மயிலாடுதுறையில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (28). இவர் அங்கு பைக் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த பல ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் இருவீட்டாரையும் போலீஸ் அழைத்து விசாரித்தபோது, அந்த பெண் இளையராஜாவைதான் திருமணம் செய்துக் கொள்வேன் என உறுதியாக இருந்துள்ளார். அதோடு இந்த விவகாரம் முடிந்த நிலையில், நேற்று இரவு மெக்கானிக் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட இளையராஜாவை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலை செய்வதவர்களை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதும் முன்பகை இருந்ததா? என்பது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.