தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
WEBDUNIA TAMIL September 17, 2025 02:48 AM

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை பெய்து வரும் நிலையில் இன்று 16 மாவட்டங்களில் கனமழையாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நெல்லை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்புத்தூர், வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை, வெப்பச்சலனத்தால் ஏற்பட்டதாக இருந்தாலும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான ஒரு அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தொடங்கும் பருவமழை, இந்த முறை முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக வானிலை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.