புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உள்பட்டது கீரமங்கலம் கிராமம்.
இந்த கிராமத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தண்ணீர்த் தொட்டி, கொத்தமங்கலம்–கீரமங்கலம் முதன்மைச் சாலை ஓரத்தில் கிராம மக்களுக்காக கட்டப்பட்டது.
காலம் கடந்ததால் அந்தத் தொட்டியின் தூண்கள் அரிந்து, தண்ணீர்த் தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும், இந்தத் தொட்டி தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அவ்வூரின் சமூக செயற்பாட்டாளரான சிகா. லெனின் அவர்களிடம் பேசியபோது,
"சாலையோரத்தில் மக்களுக்கு பயன்படாமலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ள இந்தத் தண்ணீர்த் தொட்டியை அகற்றக் கோரி நான் பலமுறை கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினேன்.
இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் குறைதீர் மனுநீதி முகாமிலும் மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இணையவழி முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் என எல்லா வழிகளையும் அறவழியில் கடைபிடித்து,
கடந்த 4 வருடங்களாக பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என மிகுந்த மனவேதனையுடன் கூறினார்.
உபயோகத்தில் இல்லாத தண்ணீர்த் தொட்டி அருகே பேருந்து நிறுத்தமும் உள்ளதால் ஏதாவது உயிர் சேதம் ஏற்பட்டுவிடுமோ எனவும் ஊர்மக்கள் பயப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
கடந்த 13/7/2025 அன்று இது தொடர்பாக திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் 10 தினங்களில் பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டியை அகற்றி விடுவதாக எனக்கு உறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மிகுந்த மன வருத்தத்துடன் லெனின் கூறினார்.
ஆதலால் லெனின் மற்றும் கீரமங்கலம் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் வருகின்ற 16/09/2021 ஆம் தேதி முதல் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக காலவரையற்ற உண்ணா நிலை அறப்போராட்டம் தொடங்க போவதாக கூறினார். மேலும் கீரமங்கலம் கிராம மக்கள் அனைவரும் உபயோகத்தில் இல்லாத தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை ஏற்காத தமிழக அரசை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும் கூறினர்.
எனவே, ஆபத்தான தண்ணீர்த் தொட்டியை அகற்றக் கோரிக்கை விடுத்தும், அதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கிற அரசைக் கண்டித்து, திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.
"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" - விஜயபாஸ்கர் தாக்கு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk