சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலப்பட உணவுப் பொருட்களை எளிய முறைகளில் கண்டறிவது பற்றி விளக்கியுள்ளனர். உதாரணமாக, கலப்படமில்லாத டீத்தூளை தண்ணீரில் போட்டால் தண்ணீரின் நிறம் மாறாது, ஆனால் கலப்படமான டீத்தூளை போட்டால் உடனே நிறம் மாறிவிடும். அதேபோல், வெள்ளம் அடர் நிறத்தில் இருந்தால் அது கலப்படமற்றது, ஆனால் வெளிர் நிறத்தில் இருந்தால் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும், சோம்பு மற்றும் பட்டாணி போன்றவை அதிக பளபளப்பாகவோ அல்லது அடர் நிறத்திலோ இருந்தால், அவை கலப்படம் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
View this post on InstagramA post shared by My Namakkal (@mynamakkal)
அதேபோல், மிளகில் பப்பாளி விதைகளை கலந்து கலப்படம் செய்யும்போது, அதை தண்ணீரில் போட்டால் மிளகு தண்ணீரின் அடியில் மூழ்கிவிடும், ஆனால் பப்பாளி விதைகள் மிதக்கும் என்று விளக்கியுள்ளனர். இந்த எளிய முறைகளைப் பயன்படுத்தி, ஒரு பொருளைப் பார்த்து அது கலப்படமானதா அல்லது கலப்படமற்றதா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.